கோழி வளர்ப்பு
பொதுவாக கோழி
வளர்ப்பில் இரு வகை முறைகள் பின்பற்றப்படுகின்றன.
- கூண்டு முறை / கொட்டகை
முறை
- ஆழ்கூள முறை
கொட்டகை முறை
கோழி ஒன்றுக்கு
0.6-0.75 சதுர அஎ அளவு வீதம் இருக்கும்படி கோழிக் கொட்டகை அமைக்கவேண்டும்.
இம்முறைதான் நன்கு பலன் தரக்கூடிய கோழி வளர்ப்பு முறையாகும். கூரை ஒரு ஆஸ்பெஸ்டாஸ்
கொண்டு அமைக்கலாம். சிறு சிறு அறைகளாகத் தடுத்து ஓர் அறைக்கு 300 குஞ்சுகளுக்கு மிகாமல் வளர்க்கலாம்.
பயன்கள்
- ஒரு குறிப்பிட்ட
குறைந்தளவு இடத்தில் நிறைய கோழிகளை வளர்க்கலாம்.
- பதிவேடுகளை சரியாகப் பராமரிக்க
முடியும்.
- சரியான வளர்ச்சியுற்ற
உற்பத்திக் குறைந்த கோழிகளைப் பிரித்தெடுத்தல் எளிது.
- இம்முறையில் தான்
கோழிகள் அதன் முட்டை மற்றும் ஊண் உண்ணுதலைத் தடுக்க முடியும்.
- இம்முறையில் சுத்தமான
முட்டைகள் பெறப்படுகின்றன.
- அழுத்தக் காரணிகள்
குறைவு.
- இரத்தக்கழிச்சல், குடற்புழுக்கள்
போன்ற ஒட்டுண்ணிகளின் நோய்த்தாக்குதல் கட்டுப்படுத்த முடியும்.
- தீவனங்கள் அதிகம்
வீணாகாமல் தடுக்கப்படுகிறது.
- மிதவெப்பமண்டலப்
பகுதிகளில் கோழி வளர்ப்பிற்கு கீழ்க்கண்ட மருந்துகளில் கோழிகளை அமிழ்ந்தவை அல்லது மருந்தை தூவுவதற்கோ பயன்படுத்தலாம்.
மழைக்காலங்களில் அமிழ்த்துதல் நல்லதல்ல. மேலும் கோழியின் தலையை நனைப்பதும்
தவிர்க்கப்படவேண்டும்.
- மேலும் குஞ்சுகளை வளர்ந்த கோழிகளிடமிருந்து பிரித்து வளர்த்தல், கொட்டகை மற்றும் அனைத்து சாதனங்களையும் சுத்தமாக வைத்திருத்தல், பார்வையாளர்களை உள்ளே அனுமதிக்காமல் இருத்தல், இறந்த கோழிகளை முறையாக அப்புறப்படுத்துதல், எலி மற்றும் பிற பறவைகளின் நடமாட்டத்தைப் பண்ணையிலிருந்து நீக்குதல் போன்ற முறையான சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் வேண்டும். அதோடு பயனற்ற பறவைகளை நீக்குதல் போன்றவையும் நல்ல பலன் தரக்கூடிய பராமரிப்பு முறைகளாகும்.