பன்றி வளர்ப்பு
உலக
அளவில் பன்றி எண்ணிக்கையின் 1 சதவிகிதம் அதாவது 1 மில்லியன்
பன்றிகள் மட்டுமே நம் நாட்டில் வளர்க்கப்படுகின்றது. வளர்ச்சியடையாத பல நாடுகளில்
கூட அதிக அளவு உரோமம் மற்றும் பன்றி இறைச்சியை ஏற்றுமதி செய்கின்றனர்.
வேளாண்மையில் பன்றியின் பங்கு அதிகளவு அறியப்படாததால் பன்றி வளர்ப்பு, வேளாண் சார்ந்த நாடான நம் நாட்டில் குறைவாகவே உள்ளது. தீவிரப்படுத்தப்பட்ட
மற்றும் நவீன வேளாண்மையில் பன்றி வளர்ப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது. பன்றிகள்
வேளாண் கழிவுகளான மில்லிலிருந்து வெளிவரும் தவிடு, வீணான
உணவுப் பண்டங்கள், கழிக்கப்பட்ட தீவனங்கள், பயறுகள் போன்றவற்றை உட்கொண்டு அவற்றை சிறந்த இறைச்சியாக மாற்றுகின்றன. அதே
போல் பன்றியின் கழிவுகளும் மண்ணை வளப்படுத்தும் திறன் பெற்றவை.
பன்றி
விரைவாக வளரும் தன்மை கொண்டதுடன் ஒரு ஈற்றில் 10-12 குட்டிகள் வரை ஈனும் திறன் பெற்றது. ஒரு
வருடத்திற்கு நல்லப் பராமரிப்பு இருந்தால் 2 ஈற்றுகள் குட்டி
ஈனும். பன்றியின் உடல் எடை உயிருடன் இருப்பதை விட 65-80 சதவிகிதம்
அதிகமாக இருக்கும். எளிய கட்டிடம் மற்றும் கொட்டகை அமைப்பில் சரியான தீவனமும்
முறையான நோய்பராமரிப்புச் செய்தால் பன்றி வளர்ப்பு மிகச்சிறந்த இலாபம் தரக்கூடிய
தொழிலாகும்.
பன்றி இனங்களின் தெரிவு முறைகள்
- வணிக ரீதியான பன்றிப்
பண்ணைக்கு தரமான கலப்பின அல்லது அயல் நாட்டு அதிக எடை தரும் இனங்கள் ஏற்றவை.
- பெண் பன்றிகளைத்
தேர்ந்தெடுக்கும் போது அவை நல்ல ஆரோக்கியமான அதிக எடை தரும் குட்டிகளை
ஈனக்கூடியதா எனப் பார்த்துத் தெரிவு செய்யவேண்டும்.
- இனச்சேர்க்கைக்குத்
தயாராக உள்ள பருவமடைந்த பன்றிகளாகத் தேர்ந்தெடுத்தல் நலம்.
- புதிதாக வாங்கிய
பன்றிகளுக்கும் காதில் பச்சை குத்தியோ, மூக்கு வளையம் இட்டோ
அடையாளக் குறியிடுதல் வேண்டும்.
- சரியான தருணத்தில்
தடுப்பூசிகள் போடுதல் வேண்டும்.
- 3 மாதங்களுக்கு ஒரு முறை 2 பிரிவுகளாகப் பிரித்து
வாங்குதல் வேண்டும்.
- அவ்வப்போது கவனித்து
சரியான எடைவந்த பன்றிகளை விற்றுவிடவேண்டும்.
- ஒவ்வொரு 10-12 ஈற்றுக்கு ஒரு முறை
கண்டிப்பாக பன்றிக்கூட்டத்திலிருந்து தேவையற்ற பன்றிகளை அகற்றிவிடுதல்
வேண்டும்.
(ஆதாரம்: www.vuatkeral.org)
இனக்கலப்பிற்கான ஆண் பன்றியைத் தேர்வு செய்தல்
- தேர்வு செய்யும் பன்றி
நல்ல குட்டி ஈனும் தாய்ப்பன்றியினால் ஈனப்பட்டதாக இருத்தல் வேண்டும்.
- ஒரு ஈற்றில் ஈன்ற
குட்டிகள் எண்ணிக்கை மற்றும் எடை, முறையே 8 மற்றும் 72 கிலோவாக தாயிடமிருந்து பிரிக்கும் போது இருக்கவேண்டும்.
- முதல் தேர்வில்
குறைந்தது 5 மாதத்தில் உடல் எடை 60 கிலோவாவது இருக்க வேண்டும்.
- எந்த ஒரு உடல்
குறைபாடின்றி ஆரோக்கியமானதாக இருத்தல் வேண்டும்.
- இனக்கலப்பு செய்யும்
ஆண், பெண் பன்றிகள்
வெவ்வேறு தாயிடமிருந்து வந்தவையாக இருத்தல் வேண்டும். இனச்சேர்க்கை ஆண்
பன்றிகளை குறைந்தது 2
வருடங்களுக்கு
ஒரு முறை மாற்றிவிடுதல் வேண்டும். அப்போது தான் உட்கலப்பு ஏற்படுவதைத் தவிர்க்க முடியும்.
ஆண் பன்றிப் பராமரிப்பு
- ஆண் பன்றிகள் 7 மாத வயதிலேயே பருவத்திற்கு வந்தாலும் 10 மாதங்களுக்குப் பிறகு (100 கிலோ எடை அடைந்த பிறகே)
இனக்கலப்பிற்கு முற்றிலும் தகுதி பெறும்.
- கலப்புச் சமயத்தில்
இனச்சேர்க்கை முடிந்த பிறகு உணவளிப்பதே சிறந்தது.
- ஆண்-பெண்(பெட்டை)
பன்றிகள் விகிதம் 1:25
அளவில்
இருக்கலாம்.
- திறந்தவெளிப் பயிற்சி
ஆண் பன்றியை ஆரோக்கியமாக வைக்க உதவும்.
- ஒவ்வொரு ஆண் (கிடா) பன்றியும்
தனித்தனியாகப் பராமரிக்கப்படவேண்டும்.
- கிடாப் பன்றியின்
திறனை வயதைப் பொறுத்து வாரத்திற்கு 2 - 4 முறை வரை
இனக்கலப்பிற்கு உட்படுத்தலாம்.
- கன்று வீச்சு நோய், லெப்டோ ஸ்பைரோசிஸ் போன்ற நோய்கள்
இருக்கிறதா என்பதை அவ்வப்போது சோதித்துக் கொள்ளவேண்டும்.
பெண் பன்றிகள் தேர்வு
- பெண் பன்றிகளைத்
தேர்ந்தெடுக்கும் போது அதிக பிறப்பு எடையுள்ள, உயரிய இனத்தில் பிறந்த 6-8 மாதக் குட்டிகளை
வளர்ப்பதற்கு தேர்ந்தெடுக்கவேண்டும். பெண் பன்றிகளின்
மடியில் 12
காம்புகள்
இருக்கவேண்டும். அவ்வாறு இருந்தால் தான் 12
குட்டிகளுக்குப்
பால் கொடுக்க முடியும்.
- தாய்ப்பன்றி, குட்டிகளுக்கு 2 மாதங்கள் வரை பால் கொடுக்கும்.
மீண்டும் ஒரு வாரத்திற்குள் இனப்பெருக்கத்திற்குத் தயாராகிவிடும்.
- தாய்ப்பன்றிக்கு
சிறிது சிறிதாக தீவனம் கொடுத்து இரண்டு வாரங்களில் முழுத் தீவனம் கிடைக்கச்
செய்ய வேண்டும்.
- நல்ல தீனியோடு சினைப்
பன்றிகளுக்கு முறையான கொட்டில் வசதியும், மிதமான பயிற்சியும் தேவை.
- கன்னிப் பன்றியையும், கிடாப் பன்றியையும் ஒரே கொட்டிலில்
அடைக்கலாம்.
- சினையான பன்றியை
கிடாக்களுடன் அனுமதிக்கக்கூடாது.
- ஒரே கொட்டிலில்
அளவுக்கு மீறி பல பன்றிகளை அடைத்தல் கூடாது. அதேபோல் புதிதாக
வாங்கியப் பன்றிகளை பழையப் பன்றிகளுடன் சேர்த்து விடுதல் கூடாது.
- பண்ணை வீட்டின் தரைகள் சொரசொரப்பாகவும், கடினமாகதாகவும், நீர்க்கசிவு போன்ற பிரச்சனைகள் இல்லாமலும் இருக்கவேண்டும்.
பன்றி வளர்ப்பின் நன்மைகள்
- பன்றிகளை எந்தச்
சூழலிலும் எந்தப் பண்ணையிலும் வளர்க்கலாம்.
- பன்றிகள் வேகமாக
வளரும் திறன் கொண்டுள்ளதால் ஒரு நாளைக்கு 350 முதல் 600 கிராம் வரை எடை
கூடுவதால், குறுகிய காலத்தில்
அதிகப் பயன் கிடைக்கின்றது.
- வருடத்திற்கு இருமுறை (ஒரு
தடவைக்கு 8
முதல் 12 குட்டிகளை) ஈனுகின்றன.
- மலிவான கொட்டகை
மற்றும் சாதனங்கள் போதுமானவை.
- பண்ணைக் கழிவுகள்
மற்றும் சமையற்கூடக் கழிவுகளை உண்டு சத்துள்ள இறைச்சியாக மாற்றும் திறன்
பெற்றவை.
- பன்றிக் கழிவுகள்
மீன்களுக்கும், பயிர்களுக்கும் சிறந்த
எருவாக பயன்படுகின்றன.
- பன்றித் தொடைக்கறி, உப்புத் தடவப்பட்ட பின்பகுதிக் கறி, பன்றிக் கொழுப்பு, குழலப்பக் கொத்துக்கறி போன்ற பன்றியின்
பல்வேறு வகைப் பொருட்களுக்கு உள்நாட்டிலும், அயல்நாட்டிலும் அதிக மதிப்புள்ளது.
No comments:
Post a Comment