ஜெர்சி
- இங்கிலாந்தின் ஜெர்சி தீவில் உருவான
சிறிய மாட்டினம்
- இந்தியாவின் தட்பவெப்பநிலைக்கு இந்த இன மாடுகள் நன்கு ஏற்றவையாக உள்ளன. எனவே இவை இந்தியாவின்
நாட்டு மாடுகளின் கலப்பினத்திற்கு பொதுவாக உபயோகிக்கப்படுகின்றன
- இம்மாடுகள் சிவப்பு கலந்த பழுப்பு
நிறத்துடன் காணப்படும்
- இம்மாடுகள் தட்டையான முன்பகுதி தலையுடன், கச்சிதமான உடலமைப்புடனும் காணப்படும்
- இம்மாட்டினங்களின் பாலில் 5.3 % கொழுப்பு மற்றும் 15% இதர திட சத்துக்களும்
இருக்கிறது.
|
ஹோல்ஸ்டியன் –ஃபிரீசியன்
- இம்மாட்டினம் நெதர்லாந்தின் வட
பகுதிகளில் குறிப்பாக ஃபிரீஸ்லாந்து பகுதியில் உருவானது
- இவை நன்கு உருவான உடலமைப்புடன், பெரிய பால் மடிகளையும் கொண்டவை
- இவை அதிக பால் கொடுக்கும் பெரிய
மாட்டினங்களாகும். நன்கு வளர்ந்த மாடுகள் 700 கிலோ
உடல் எடை வரையுடன் இருக்கும்
- இவற்றின் உடல் கருப்பு மற்றும் வெள்ளை
நிற திட்டுகளுடன் காணப்படுவதால் இவற்றை எளிதில் அடையாளம் காணமுடியும்
- ஒரு கறவை காலத்தில் இவற்றின் சராசரி பால்
உற்பத்தி 6000-700 கிலோக்களாக இருக்கும். ஆனால்
இம்மாட்டினங்களின் பாலில் கொழுப்புச்சத்து குறைவாக இருக்கும் (3.45%)
|
பிரவுன் ஸ்விஸ்
- இம்மாட்டினங்கள் ஸ்விட்சர்லாந்தின்
மலைப்பகுதிகளிலிருந்து தோன்றியவை
- ஸ்விட்சர்லாந்தில் இம்மாட்டினங்கள்
பெயர்பெற்றவை. மேலும் இவற்றின் உடல் நன்கு பெரியதாகக் காணப்படுவதுடன், இவற்றின் பால் உற்பத்தியும் அதிகம்
- கரன் ஸ்விஸ் எனப்படும் மாட்டினம்
இந்தியாவின் நாட்டு மாடுகளுடன் பிரவுன் ஸ்விஸ் மாட்டினங்களை கலப்பினம்
செய்து உருவாக்கப்பட்ட ஒரு சிறந்த கலப்பின மாட்டினமாகும்.
|
ரெட் டேன்
- டேனிஸில் உருவான இம்மாட்டினங்களின் உடல்
சிவப்பு நிறத்துடனோ அல்லது சிவப்பு கலந்த பழுப்பு நிறத்துடனோ அல்லது
அடர்ந்த பழுப்பு நிறத்துடனோ காணப்படும்
- இவை நன்கு வளர்ந்த பெரிய
மாட்டினங்களாகும். காளைகள் 950 கிலோ
உடல் எடை வரை இருக்கும். பசு மாடுகள் 600 கிலோ வரை
உடல் எடையுடன் இருக்கும்
- ரெட் டேன் மாடுகளின் பால் உற்பத்தி 3000-4000
கிலோக்களாக, 4 சதவிகிதம் அல்லது அதற்கு
மேற்பட்ட கொழுப்புச்சத்துடன் இருக்கும்
|
ஆயிர்ஷையர்
- இம்மாட்டினங்களின் தாயகம்
ஸ்காட்லாந்திலுள்ள ஆயிர்ஷையர் ஆகும். இவை பால் உற்பத்தி செய்யும் அழகான
மாட்டினங்களாகும். இவை மிகுந்த சுறுசுறுப்புடன் இருப்பதால் இவற்றை மேலாண்மை
செய்வது கடினம்
- இவற்றின் பால் உற்பத்தி குறிப்பிடும்
படியாக இல்லை, மேலும் பாலின் கொழுப்புச்சத்தும்
மற்ற மாட்டினங்களை போலவே (4%) இருக்கும்.
- இந்த மாட்டினம் டன்லப் மாடு அல்லது
கன்னிங்ஹாம் மாடு என்றும் அழைக்கப்படுகிறது
|
கராச்சி
- இம்மாட்டினங்கள் பிரான்சின் கராச்சி
எனும் தீவிலிருந்து தோன்றியவை
- இவற்றின் பாலில் அதிக அளவு புற்றுநோயினைத்
தடுக்கும் பீட்டா கரோட்டின் எனப்படும் சத்து இருப்பதால் பொன்னிறத்துடன்
இருக்கும்.
- இம்மாட்டினங்களின் பாலில் அதிக அளவு
கொழுப்புச்சத்தும் (5%), அதிக அளவு
புரதச்சத்தும் (3.7%) இருக்கிறது
- கராச்சி மாடுகள் ஒரு வருடத்தில் 6000 லிட்டர்கள் வரை பால் உற்பத்தி செய்யும்
- இம்மாட்டினங்கள் அதிக பால் உற்பத்தி
செய்வதாலும், கன்று ஈனும் போது மிகக்குறைந்த
சிரமங்களே இருப்பதாலும், நீண்ட நாள் வாழ்வதாலும்
இவற்றை வளர்க்கும் பால் பண்ணையாளர்களுக்கு அதிக நன்மைகள் உண்டு
ஆதாரம்: www.tanuvas.ac.in
|
No comments:
Post a Comment